
நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 27ம் திகதி வரை ஒத்தி வைக்கப்ப்டுள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் சந்திப்பில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில் சபை அமர்வு ஆரம்பமாகியிருந்தது. இதன் போது நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஆளுங்கட்சி எனும் அடிப்படையில் தமக்கே அதிக இடங்கள் தரப்பட்டிருக்க வேண்டும் என தினேஸ் குணவர்த்ன கருத்து வெளியிட்டிருந்தார்.
இதேவேளை, தம்மை ஆளுங்கட்சியாக அனுமதிக்குமாறு பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்திருந்த அதேவேளை 14ம் திகதி நாடாளுமன்ற அமர்வில் அரசாங்கம் கலைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையில்லையெனவும் வாக்கெடுப்பை நடாத்துமாறும் அநுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், மஹிந்த தரப்பு வெளிநடப்பு செய்த அதேவேளை 121 உறுப்பினர்கள் வாக்களித்து தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment