
மஹிந்த ராஜபக்ச அரசு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 122.3 மில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2005 - 2015 வரை பாரிய முறைகேடுகள், அரச நிறுவனங்களை இழப்புக்குள்ளாக்கியமை, ஊழல் என பல்வேறு குற்றச்சாட்டுகள் மஹிந்த ராஜபக்ச நிர்வாகத்தின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் உள்ள நிலையில் பல வழக்குகள் விசாரணையின் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், 2006 - 2014 வரையான காலப்பகுதியில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 122.3 மில்லியன் ரூபா மஹிந்த அரசு செலுத்த வேண்டியுள்ளதாக ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா முறைகேடுகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment