ஜமால் கஷோகி விவகாரம்: சவுதி மாநாட்டில் பங்கேற்க UK மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுப்பு - sonakar.com

Post Top Ad

Thursday 18 October 2018

ஜமால் கஷோகி விவகாரம்: சவுதி மாநாட்டில் பங்கேற்க UK மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுப்பு


சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோகி காணாமல் போயுள்ள நிலையில் சவுதி அரேபியா அவரைக் கொலை செய்து விட்டதாக பரவலாக நம்பப்படுகிறது.


இப்பின்னணியில், சவுதியில் இடம்பெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்வதிலிருந்து விலகிக் கொள்வதாக ஐக்கிய இராச்சியம் இன்று அறிவித்துள்ளதுடன் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியும் அவ்வாறே தாமும் கலந்து கொள்வதைத் தவிர்ப்பதாக அறிவித்துள்ளன.

கடந்த 2ம் திகதி இஸ்தான்புல், சவுதி தூதரகம் சென்ற குறித்த நபருக்கு என்ன ஆனது? எனும் விபரம் இன்று வரை மர்மமாக உள்ளதுடன் சவுதி அரேபியா தாம் கொலை செய்யவில்லையென  மறுத்துள்ளதுடன் துருக்கியுடன் கூட்டிணைந்து சோதனை நடவடிக்கைகளிலும் விசாரணைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment