கமர் நிசாம்தீனுக்கு எதிரான வழக்கை கைவிடும் பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Friday 19 October 2018

கமர் நிசாம்தீனுக்கு எதிரான வழக்கை கைவிடும் பொலிஸ்!



அவுஸ்திரேலியா, நியு வேல்ஸ் பல்கலை மாணவன் கமர் நிசாம்தீனுக்கு எதிரான வழக்கை அந்நாட்டின் பொலிசார் கை விடவுள்ளதாக ஏபிசி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.


அவுஸ்திரேலியான் முன்னாள் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை இலக்கு வைத்து ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக தீவிரவாத செயலில் இறங்கத் திட்டமிட்டதாக குறித்த நபர் மீது குற்றஞ்சாட்டியிருந்த பொலிசார் அவரைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்திருந்தனர்.

எனினும், ஆதாரமாக முன் வைக்கப்பட்ட புத்தகக் குறிப்பு குறித்த மாணவனுடையது என்பதற்கு எந்த சாட்சியமும் இல்லாத நிலையில் பிணை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது குறித்த வழக்கை பொலிசார் கைவிடவுள்ளதாக தெரிவிக்கின்ற அதேவேளை பொலிசாரிடம் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடரவுள்ளதாக கமரின் வழக்கறிஞர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment