நாலக டி சில்வாவிடம் இன்றும் ஆறு மணி நேர விசாரணை - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 October 2018

நாலக டி சில்வாவிடம் இன்றும் ஆறு மணி நேர விசாரணைஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கோத்தாபே ராஜபக்ச ஆகியோரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பதவி நீக்கப்பட்டுள்ள முன்னாள் டி.ஐ.ஜி நாலக டி சில்வாவிடம் இன்றும் ஆறு மணி நேர விசாரணை இடம்பெற்றுள்ளது.குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தொடர்ச்சியாக இவரை விசாரித்து வரும் நிலையில் ஆதாரமாக வழங்கப்பட்ட தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவில் இருப்பது அவரது குரல்தான் என அரச பகுப்பாயவுத் திணைக்களம் நீதிமன்றில் உறுதி செய்துள்ளது.

இதேவேளை, பொலிஸ் உளவாளி நாமல் குமாரவை பார்க்கச் சென்ற இந்திய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உடனடியாகவே அவருக்கு மன நிலை சரியில்லையென இந்திய தூதரகம் விளக்கமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment