
மக்கள் ஆணையை மீறி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததன் மூலம் மைத்ரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தைக் கையிலெடுத்திருப்பதாகவும் முறையான ஜனநாயகத்துக்கு இரு பாரிய பின்னடைவு எனவும் தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
சர்வாதிகாரப் போக்கு தொடர்வதை மக்கள் விரும்பவில்லையெனவும் அதற்கெதிராகவே 2015ல் மக்கள் ஆணை பெறப்பட்டதாகவும் தற்போது மைத்ரியின் செயல் அறுவெறுப்பான உதாரணமாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், தமது கட்சி தொடர்ந்தும் இதற்கெதிராகப் போராடும் எனவும் அவர் தெரிவிக்கின்ற அதேவேளை கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றைக் கலைப்பதற்கான முன்னெடுப்புகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment