முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 October 2018

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு
கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ் தேசிய கைத்தொழில் அதிகார சபையின் பணிப்பாள் இல்ஹாம் மரிக்கார் அவர்களின் ஏற்பாட்டில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நவின கற்பித்தல் முறை கருத்தரங்கு ஒன்று அமேசன் கல்வி நிறுவனத்தின் அனுசரனையுடன் தெஹிவளை எஸ்.டி.எஸ். ஜயசிங்க மண்டபத்தில் நேற்று முன்தினம் (21) இடம் பெற்றது.

நிகழ்வில் விஷேட அதிதியாக மகாவலி கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரிஸ்கான் பஷீர் கலந்து கொண்டிருந்தார். பைசின் சுபைர் வளவாளராக பங்குற்றிய இந்நிகழ்வில் சுமார் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

No comments:

Post a Comment