துருக்கிக்கான சவுதி தூதரின் வீட்டிலும் சோதனை! - sonakar.com

Post Top Ad

Wednesday, 17 October 2018

துருக்கிக்கான சவுதி தூதரின் வீட்டிலும் சோதனை!


அமெரிக்க பத்திரிகையில் சவுதி அரசை விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்த, சவுதி எழுத்தாளர் ஜமால் கஷோகி, இஸ்தான்புல் சவுதி தூதரகத்துக்குள் வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்ற நிலையில் இன்றைய தினம் துருக்கிக்கான சவுதி தூதரின் வீட்டிலும் சோதனை நடாத்தப்பட்டுள்ளது.சவதி - துருக்கி கூட்டுக் குழுவினால் ஏலவே தூதரகம் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் தூதரின் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.

தூதரகத்துக்குள் வைத்தே குறித்த நபர், கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி தகவல் மூலங்களை ஆதாரமாக வைத்து சி.என்.என். தொடர்ச்சியாக தகவல் வெளியிட்டு வருகிறது. எனினும் சவுதி அரேபியா இதனை மறுத்துள்ளதுடன் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment