பொலிஸ் - அரச ஊடகங்களின் கட்டுப்பாடுகள் மைத்ரி வசம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 27 October 2018

பொலிஸ் - அரச ஊடகங்களின் கட்டுப்பாடுகள் மைத்ரி வசம்!


புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் வரை அரச ஊடகங்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொலிஸ் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதையடுத்து ரூபவாஹினி மற்றும் லேக் ஹவுசுக்குள் உட்புகுந்த மஹிந்த ஆதரவாளர்கள் குறித்த ஊடகங்கள் தமக்கெதிராக செய்தி வெளியிட முனைவதாக தெரிவித்து சர்ச்சையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்றைய தினம் அரசு சார்பு ஊடகங்கள் மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளமையும் முன்னராக அதனை மறைக்க முயன்றதனாலேயே அங்கு தமது ஆதரவாளர்கள் செல்ல நேர்ந்ததாக கெஹலிய தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment