கலஹா சம்பவம்: பொலிஸ் சார்ஜன்ட் காயம்; மருத்துவர்கள் வெளியேற்றம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 28 August 2018

கலஹா சம்பவம்: பொலிஸ் சார்ஜன்ட் காயம்; மருத்துவர்கள் வெளியேற்றம்!


கலஹா வைத்தியசாலையில் மூன்றரை வயது குழந்தையொன்று மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரழந்ததாகக் கூறி ஊர் மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


இந்நிலையில், மருத்துவர்கள் பொலிஸ் பாதுகாப்போடு வெளியேற்றப்பட்டுள்ள அதேவேளை அங்கு கண்ணீர்ப் புகைக்குண்டு வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அங்கு ஏற்பட்ட நெரிசலில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காயப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினர் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment