சீனாவிடம் கடன் பெற்றதில் தவறில்லை: கோத்தா - sonakar.com

Post Top Ad

Sunday, 1 July 2018

சீனாவிடம் கடன் பெற்றதில் தவறில்லை: கோத்தா


மஹிந்த அரசாங்கம் சீனாவிடமிருந்து கடன் பெற்றிருக்காவிட்டால், மேற்குலக நாடுகள் போடும் தாளத்துக்கெல்லாம் ஆட வேண்டியேற்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார் கோத்தபாய ராஜபக்ச.


உலக வங்கியிடம் கடன்பெற்ற பின் அவர்கள் சொல்வதெற்கெல்லாம் இணங்கிச் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும் என்பதனாலேயே சீன உதவிகளை பெற்றுக் கொண்டதாகவும் நடைமுறை அரசு தற்போது உலக வங்கியின் அறிவுரைக் கேற்ப விவசாயத்துறையையும் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் கோத்தா மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீனா இலங்கையில் ஆதிக்கத்தை வளர்த்துக்கொள்ளவென மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் செலவுக்கும் நிதி வழங்கியிருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment