புதிய நீதிமன்றில் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக 16 வழக்குகள்: தலதா! - sonakar.com

Post Top Ad

Friday, 13 July 2018

புதிய நீதிமன்றில் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக 16 வழக்குகள்: தலதா!


ராஜபக்க குடும்பத்தாரின் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் சட்ட மா அதிபர் அலுவலகம் இதுவரை 16 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும் இவற்றை துரிதமாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட உயர் நீதிமன்றில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கிறார் நீதியமைச்சர் தலதா அத்துகோறள.மஹிந்த ஆட்சியின் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறியே ஆட்சியதிகாரம் கைப்பற்றப்பட்டிருந்த போதிலும் மூன்று வருடங்கள் தாண்டியும் காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில் ஆளுந்தரப்பு கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் படு தோல்வியை சந்தித்திருந்தது.

இந்நிலையிலேயே, புதிய நீதிமன்றம் - துரித விசாரணைகள் தொடர்பில் ஐ.தே.க தரப்பு பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment