மத்தள விமான நிலையத்தைக் கைவிடும் Fly Dubai! - sonakar.com

Post Top Ad

Saturday, 9 June 2018

மத்தள விமான நிலையத்தைக் கைவிடும் Fly Dubai!


மஹிந்த ராஜபக்சவினால் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட மத்தள ராஜபக்ச விமான நிலையத்தை உபயோகித்து வந்த ஒரேயொரு சர்வதேச விமான நிறுவனமான விமான சேவை தமது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறப்படும் மத்தள விமான நிலையத்தினை இந்திய நிறுவனம் ஒன்றக்கு குத்தகைக்கு விடுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த அதேவேளை அவ்வப்போது காலநிலை காரணமாக கட்டுநாயக்கவுக்கு பதிலாக மத்தளயிலும் விமானங்கள் தரையிறங்குவதுண்டு.

இந்நிலையில், சேவை நிறுத்தம் குறித்த விமான நிலையத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன் கூட்டியே ஆசனங்களைப் பதிவு செய்தவர்கள் தமது பணத்தினை மீளப்பெற அல்லது கட்டுநாயக்கவுக்கான சேவையை உபயோகப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment