அமெரிக்கா: பத்திரிகை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு; ஐவர் மரணம்! - sonakar.com

Post Top Ad

Friday, 29 June 2018

அமெரிக்கா: பத்திரிகை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு; ஐவர் மரணம்!


அமெரிக்கா, மேரிலேன்ட் பகுதியில் இயங்கி வரும் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்த நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் உயிரிழந்து, ஆகக்குறைந்தது மேலும் ஐவர் காயமடைந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.உள்ளூர் பத்திரிகையான 'கெப்பிட்டல் கசற்' அலுவலகத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் பின்னணியில் பாரிய பொலிஸ் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதோடு சந்தேக நபர் 38 வயது அமெரிக்கரான ஜெராட் ரமோஸ் என அடையாளங் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment