ரமழான் பிரியாவிடை ... - sonakar.com

Post Top Ad

Saturday, 16 June 2018

ரமழான் பிரியாவிடை ...
அருளையள்ளித் தந்து
அகம் நிறைய
ஆனந்த மழை மொழிந்து
அகன்று செல்லும் ரமழானே!
உனக்கு
எங்கள் அன்பு ஸலாம்!

பாவப் பிணிகளை
சுட்டெரித்து
இதயவெளிகளைப்
பரிசுத்தம் செய்த ரமழானே!
உனக்கு
எங்கள் இதயத்து சோபனங்கள்!

புலன்களுக்குப்
பூட்டுப்போட்டு
மனங்களில்
புலன்களாலே புதுவுப் பொலிவை
மலரச் செய்த ரமழானே!
உனக்கு
எங்கள் மனதின் வந்தனங்கள்!

இரவுகளில்
இறைவனுக்காய் தொழச் செய்து
நெஞ்சங்களில்
நன்மையொலியினை
படரச் செய்த ரமழானே!
உனக்கு
எங்கள் நெஞ்சத்து வாழ்த்துக்கள்!

பிறைக்கீற்றாய்
பிறந்து
மதியாய் வளர்ந்து
மனித நேயங்களை
மனிதர்களுக்குள்
மலரச் செய்து மறையும்
மாட்சிமைமிக்க ரமழானே!
உனக்கு
எங்கள் உள்ளத்து நன்றிகள்!

உன் வரவின்
தலைப்பிறை
கருத்தொற்றுமையின்மைகளை
கணதியாக்கி
வழிகாட்டிகளால் வழிதறச்செய்திருந்;தாலும்;
நோக்கத்தை ஒன்றாக்கி
நகரும் ரமழானே!
உந்தன் பிரியாவிடைப் பொழுதிலிருந்து
புலரும்
இன்பப் பெருநாளோடு
வளர வேண்டும்
எங்களுக்குள் ஐக்கியம்!

-முனையூர் ஏ ஸமட்


No comments:

Post a Comment