புத்தளம் தில்லையடி முல்லை வீட்டுத்திட்டத்தில் மக்தப் நிலையம் - sonakar.com

Post Top Ad

Saturday, 9 June 2018

புத்தளம் தில்லையடி முல்லை வீட்டுத்திட்டத்தில் மக்தப் நிலையம்புத்தளம் தில்லையடி முல்லை வீட்டுத்திட்டத்தில் வதியும் சிறார்களின் சன்மார்க்க அறிவை வளர்க்கும் பொருட்டு புதிய மக்தப் நிலையமொன்று இன்று திறந்து வைக்கப்பட்டது. 

வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களும் ISRC நிறைவேற்று அதிகாரி ஜனாப்.மிஃலார் அவர்களும் இணைந்து  இதனை திறந்து வைத்தனர். 


இந்த பிரதேச மக்கள் தமது சிறார்களின் சன்மார்க்க அறிவினை மேம்படுத்துவதற்காக கெளரவ பாராளுமன்ற உறுப்பினரிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து அவர் ISRC நிறுவனம்  மூலம் கட்டார் செரிட்டி நிறுவனம் ஊடாக இந்த நிலையத்தினை அமைத்துக் கொடுத்திருந்தார்.

இந்த திறப்புவிழா நிகழ்வில் உரைநிகழ்த்திய கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் காதர் மஸ்தான் தனதுரையில் குறிப்பிட்டதாவது  இந்த கிராமத்தில் நிலவும் பல் வேறுபட்ட குறைபாடுகளை இனங்கண்டு தமக்கு முன்னிலைப் படுத்துமாறும் அவற்றை  பூர்த்தி செய்ய தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இந்த கிராமத்தில் பாலங்கள் மதகுகள் நிர்மாணிப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார். ஏராளமான பொதுமக்கள் உலமாக்கள்,பெற்றோர்கள், நலன்விரும்பிகள்  என பலரும் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் இக்கிராமத்திற்கான புதிய மத்ரஸாக்கான அடிக்கல்லையும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

-KM

No comments:

Post a Comment