கோத்தாவை மேற்கு நாடுகள் ஏற்காது: மஹிந்த மௌனம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 13 June 2018

கோத்தாவை மேற்கு நாடுகள் ஏற்காது: மஹிந்த மௌனம்!


கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக வருவதை மேற்கு நாடுகள் ஏற்கப் போவதில்லையென கூட்டு எதிர்க்கட்சியினருக்கு மஹிந்த ராஜபக்ச ஊடாக தெளிவுபடுத்த முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அமெரிக்க பிரஜையான கோத்தபாய ராஜபக்ச தனது பிரஜாவுரிமையை விட்டுக்கொடுக்க முடியுமா என்பது தொடர்பில் சட்ட ஆராய்வுகளை மேற்கொண்டு வருகிறார். எனினும், அமெரிக்கா இதனை அனுமதிக்காது என்றே நம்பப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வார இறுதியில் மஹிந்த ராஜபக்சவை சந்திதத இலங்கைக்கான அமெரிக்க தூதரும் இது தொடர்பில் மஹிந்த ராஜபக்சவுக்குத் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a comment