கல்முனை: BIS குர்ஆன் சம்பியன் விருது - sonakar.com

Post Top Ad

Wednesday, 27 June 2018

கல்முனை: BIS குர்ஆன் சம்பியன் விருதுகல்முனை  மாநகரில் அமையப்  பெற்ற  பிரித்தானிய  இஸ்லாமிய பாடசாலை (British Islamic School ) ஆரம்பிக்கப்பட்டு   ஓராண்டு பூர்த்தியினை முன்னிட்டும்;  கடந்த   ரமழான் மாதத்தை  கண்ணியப்படுத்தியும்


"அல்குர்ஆன் சம்பியன் விருது" (Qur’an Champion  Award)  வழங்கும்  போட்டிக்கு  நாட்டின் பல பாகங்களில் இருந்து.   நூற்றுக் கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தது அந்தவகையில் கல்வியலாளரும் , தொழில் அதிபருமாருமான  ,  ஜெஸீம் அப்துல் ஹமீட் அவரின் நெறிப்படுதலில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.3  வயது தொடக்கம்  14  வயதை உடைய பிள்ளைகள் கலந்து  கொள்ளும் நிகழ்ச்சியில் 100 பேருக்கான அனுமதி வழக்கப்பட்டிருந்ததுதேர்வுக்குள்ளாக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டு போட்டியாளர்கள் முதலாம் சுற்றுக்கு  தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .இப் போட்டியாளர்களுக்கான முதலாவது சுற்றுப் போட்டி இன்று (27 ) கல்முனை பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலையில் வெகு விமர்சையாக  நடைபெற்றது. 

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சர்வேதேச புகழ்பெற்ற இளம் வயதுடைய ஹாபிசா செல்வி  மர்யம் மசூத் இப்போட்டி நிகழ்ச்சிக்கு கெளரவ  நடுவராகவும் மற்றும்,உள்ளுர் உலமாக்களும் நடுவராக செயற்ப்படுகின்றனர்


கடந்த  வருடம் கனடாவில் நடைபெற்ற சர்வதேச  போட்டியில் ஐக்கிய  ராஜ்ஜியத்தை பிரதி நிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட குர்ஆன் மனனம் இதர மற்றும்  போட்டிகளில் வெற்றி ஈட்டியவரும்  பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலையின் ஸ்தாபக மாணவரான 6  வயதே உடைய  "மர்யம் ஜெஸீம்" இன் எண்ணத்தில் உருவானதே இப்போட்டி நிகழ்ச்சியும் விருது  வழங்கழும் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் அடைந்த வெற்றி அனுபவத்தை போல் இலங்கையில் உள்ள சிறுவர்களும் பெறவேண்டும் என்ற நோக்கில்  இப்பாடசாலை மூலம்  களம்  அமைத்துக் கொடுக்க  வேண்டும்  என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியதன்  மூலம் இதன் ஏற்ப்பாடு இடம்பெற்றது.


மேலும் ,இப் போட்டியானது சர்வேதேச  ரீதியில் நடைபெற ஒழுங்குகள் செய்யபட்டுள்ளது.பங்கு பற்றும் போட்டியாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன் முதல் மூன்று இடங்களை பெறும்  மாணவர்கள் வெற்றிக் கிண்ணங்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்படுவுள்ளனர் அத்துடன் அவர்கள் கனடாவில் நடாத்தப்படும் சர்வதேச இஸ்லாமிய போட்டிகளுக்குப் பரிந்துரைக்கப்படுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-எம்.என்.எம்.அப்ராஸ்

No comments:

Post a Comment