
ஞானசாரவின் விடுதலை கோரி ஜனாதிபதியிடம் மண்டியிடப் போவதில்லை என்கிறார் பொது பல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலன்த விதானகே.
ஞானசாரவுக்கு அநீதியிழைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் டிலன்த இது குறித்து அரசாங்கம் சுயமாக சிந்திக்க வேண்டும் எனவும் தமது அமைப்பு பொது மன்னிப்புக்காக மண்டியிடப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார்.
ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனைக்காக வெலிக்கடை அழைத்துச் செல்லப்பட்ட ஞானசார தற்போது அங்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பார்வையாளர்களை சந்திப்பதையும் தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சிறைச்சாலைக்குள் ஞானசார ஏனைய கைதிகளுக்கு 'போதனை' நடாத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment