கந்தளாய் அஸ்-ஸபா வித்தியாலயம் தரமுயர்வு - sonakar.com

Post Top Ad

Tuesday, 15 May 2018

கந்தளாய் அஸ்-ஸபா வித்தியாலயம் தரமுயர்வு


கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தி/அஸ்-ஸபா வித்தியாலயம் வகை மூன்றிலிருந்து  வகை இரண்டாக தரமுயர்த்தும் விழா நேற்று(14) அப் பாடசாலையில் அதிபர் ஏ.ஆர்.பைசல் தலைமையில் நடைபெற்றது.    

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கந்தளாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.டி.எம்.தாரிக் மௌலவி (நளிமி),கலந்து கொண்டு நாடாவினை வெட்டி ஆரம்பித்து வைத்ததோடு,இதன் போது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.    

இந்நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர்கள்,பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும்  பெற்றோர்கள் ,மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.  

-எப்.முபாரக்

No comments:

Post a comment