அட்டாளைச்சேனையில் வை.எம்.எம்.ஏ. இன் முப்பெரும் விழா - sonakar.com

Post Top Ad

Saturday, 12 May 2018

அட்டாளைச்சேனையில் வை.எம்.எம்.ஏ. இன் முப்பெரும் விழா

வை.எம்.எம்.ஏ. பேரவையின் முப்பெரும் விழா அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ. கிளையின் தலைவர் தேசகீர்த்தி எம்.ஐ.எம்.றியாஸ் தலைமையில் அறபா வித்தியாலய கேட்போர் கூடத்தில் 2018-05-12 ஆம் திகதி மிகக்கோலாகலமாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக  வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் தேசபந்து எம்.என்.எம்.நபீல் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக பேரவையின் தேசிய பொதுச்செயலாளர் சஹீட் எம் றிஸ்மி பங்குகொண்டனர்.

நிகழ்வின் நட்சத்திர அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரும் விஷேட அதிதிகளாக தேசிய உதவிச்செயலாளர் எம்.ஐ.உதுமாலெப்பை மற்றும் முன்னாள் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஆதம்பாவா  ஆகியோரும் முன்னிலை அதிதிகளாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.பௌசுல்,எஸ்.தஸ்தகீர் ,கே.எல்.சுபைர் மற்றும் தமீம் ஆப்தீன் ஆகியோர் உள்ளிட்ட அதிதிகளும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் 25 பிரபலங்கள் பொன்னாடை மற்றும் ஞாபக சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் தொழிலதிபர், வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் தேசபந்து எம்.என்.எம்.நபீல் “கொடைமேகம்” என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். அதேபோல் பேரவையின் தேசிய பொதுச்செயலாளர் சஹீட் எம் றிஸ்மி “சமூகநேயம்” என்ற கௌரவ பட்டத்தையும் எஸ்.எல்.ஆதம்பாவா “கல்விநாதம்” கௌரவத்தையும் பெற்றார்.
கல்வி விளையாட்டு மற்றும் ஏனைய துறைகளில் திறமை காட்டிய மாணவர்களும் கெளரவங்களை பெற்றதுடன் பாடசாலை உபகரணங்களையும் பெற்றுக்கொண்டனர்.
-எம்.வை.அமீர்

No comments:

Post a comment