மஹதிரின் வழியில் பயணித்திருக்க வேண்டும்: துமிந்த கவலை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 May 2018

மஹதிரின் வழியில் பயணித்திருக்க வேண்டும்: துமிந்த கவலை!


மலேசியாவில் ஊழலை ஒழிக்க மக்கள் முன் வைத்த கோரிக்கையை ஏற்று பதவிக்கு வந்த மஹதிர், பதவியேற்றதும் அதிரடியான ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 


இதுபோலவே, இலங்கை மக்களும் எதிர்பார்ப்புடன் ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய போதிலும் இங்குள்ள விசாரணையாளர்கள் அரசியல் வாதிகள், பணக்காரர்களை விசாரிக்கக் கூட தயங்குவதாகவும் அதேவேளை சாதாரண மக்கள் மீது வலுவாக நடந்து கொள்வதாகவும் கவலை வெளியிட்டுள்ளார் ஸ்ரீலசுக செயலாளர் துமிந்த திசாநாயக்க.

அனைத்து மக்களுக்கும் சமநீதி கிடைக்கும் சூழ்நிலையில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், மஹதிரின் வழியில் அரசு பயணித்திருக்க வேண்டும் எனவும் அநுராதபுரத்தில் வைத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment