விரைவில் தோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம்: வஜிர - sonakar.com

Post Top Ad

Saturday, 26 May 2018

விரைவில் தோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம்: வஜிரதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் ஒன்று விரைவில் அமைக்கப்படும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். தோப்பூர் பிரதேச முக்கியஸ்தர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் திங்கள்கிழமை தோப்பூர் உப பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாடு முழுவதும் பல பகுதிகளில் இவ்வாறான தனி பிரதேச செயலகம் தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இக்கோரிக்கைகள் தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறான புதிய பிரதேச செயலகங்கள் அமைக்க முன் எல்லைநிர்ணயம் போன்ற பல விடயங்கள் செய்யப்பட வேண்டும். கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் முறையற்ற எல்லை நிர்ணயங்கள் செய்யப்பட்டுள்ளன. அவைகளை நாங்கள் திருத்தி கொண்டு வருகிறோம்.


தோப்பூர் பிரதேச செயலகம் அமைப்பது தொடர்பான ஆவணனங்கள் அனைத்ததும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகாரூபால் என்னிடம் கடந்த வருடம் சமர்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தனி பிரதேச செயலகமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். அதுவரை இந்த உப பிரதேச செயலகத்தின் மூலம் சேவைகளை பெற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபருக்கு உத்தரவு இடுகிறேன் என கூறினார்.

திருகோணமலைக்கு பிரதேச செயலக கட்டிடங்களின் திறப்பு விழாவுக்கு வந்திருந்த அமைச்சரிடம் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் விடுத்த வேண்டுகோளுக்கினங்க இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றமை குறுப்பிடத்தக்கது.

-Sabry

No comments:

Post a Comment