கல்முனையில் 'சமாதான மாநாடு' - sonakar.com

Post Top Ad

Sunday, 13 May 2018

கல்முனையில் 'சமாதான மாநாடு'
அம்பாறை மாவட்ட சமய நல்லிணக்கக் குழுவும் , சமூகத்தலைவர்கள் குழுவும், உள்ளுர் அரசியல் பிரமுகர்களும்  இணைந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் வழிமுறைகளை ஆராயும் “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ” என்ற கருப் பொருளைக் கொண்டதான சமாதான மாநாடு சனிக்கிழமை (12) கல்முனையில் நடை பெற்றது.

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் சொண்ட் நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த சமாதான மாநாடு கல்முனை கிறிஸ்தா இல்லத்தில் நடை பெற்றது. 

சொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ச.செந்தூரராஜாவின் வழிப்படுத்தலில் மௌலவி ஏ.ஏ.அஸ்வர் தலைமையில் நடை பெற்ற இந்த சமாதான மாநாட்டில்  இந்து,இஸ்லாம்,கிறிஸ்தவ,பௌத்த சமயத்  தலைவர்களும் சமூகத் தலைவர்களும் கலந்து கொண்டு இனங்களுக்கிடையிலான சமாதானம் தொடர்பான கருத்துக்களை தெரிவித்தனர்.இந்த சமாதான மாநாட்டில் விசேட சொற்பொழிவாளர்களாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்.எம்.எஸ்.எஸ்.எம். உமர்மௌலானா, அதிபர் வீ.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு  இனங்களுக்கிடையிலான சமாதானம் எங்கிருந்து உருவாக வேண்டும் அது எவ்வாறு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஆழமான கருத்துரைகளை விளக்கினார்கள்.

நான்கு சமயங்களின் தலைவர்களது ஆசீர்வாத உரையை அடுத்து ஊடகக் குழு சார்பாக சிரேஸ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் ,பிரதேச செயலாளர் க.ஜெகதீஸ்வரன்,தேசிய சமாதான பேரவையின் முக்கியஸ்தரான வெனூரி டீ சில்வா உட்பட பலர் அங்கு உரையாற்றினார்கள்.

-Mohamed Ishark

No comments:

Post a comment