நல்லாட்சியால் நஷ்டப்பட்டது நான் தான்: ரவி! - sonakar.com

Post Top Ad

Friday, 25 May 2018

நல்லாட்சியால் நஷ்டப்பட்டது நான் தான்: ரவி!


இந்நாட்டில் தேர்தல் ஒன்றை நடாத்தக் கூட முடியாத அளவு அச்சம் சூழ்ந்திருந்த நிலையில் அதனை உடைத்தெறிந்து நல்லாட்சியை உருவாக்க மேற்கொண்ட முன்னெடுப்பின் மூலம் நல்லவனாக இருந்து ஈற்றில் நஷ்டப்பட்டிருப்பது தானே என தெரிவித்துள்ளார் ரவி கருணாநாயக்க.சூ

ஹேனமுல்ல பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட குடிமனைகளை பொது மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள ரவி, நல்லாட்சி எனும் நிலைப்பாட்டின் மூலம் முன்னுதாரணமான அரசியலை முன்னெடுக்கச் சென்றதன் விளைவே தனது இன்றைய நிலையென விளக்கமளித்துள்ள அதேவேளை அன்றைய சூழ்நிலையில் அச்சமின்றி தேர்தலுக்கு முகங்கொடுத்த ரணில் - மைத்ரிக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்க ஒத்துழைக்கும் பொருட்டு ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை அண்மைய அமைச்சரவை மறுசீரமைப்பின் போது பதவி நீக்கப்பட்ட விஜேதாச ராஜபக்சவுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருந்தமையும் ரவி விவகாரம் தொடர்ந்தும் இழுபறிக்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment