கோத்தபாயவுக்கும் கடத்தல்களுக்கும் சம்பந்தமில்லை: அஜித் பிரசன்ன! - sonakar.com

Post Top Ad

Friday, 25 May 2018

கோத்தபாயவுக்கும் கடத்தல்களுக்கும் சம்பந்தமில்லை: அஜித் பிரசன்ன!


கோத்தபாயவுக்கும் ஊடகவியலாளர்கள் கடத்தல் சம்பவங்களுக்கும் சம்பந்தமில்லையென தெரிவிக்கின்ற முன்னாள் இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன, பிரகீத் எக்னலிகொட ஊடகவியலாளரே இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.அக்கால கட்டத்தில் அரசை கடுமையாக விமர்சித்த விக்டர் ஐவன், இக்பால் அத்தாஸ் போன்றோர் கடத்தப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், எக்னலிகொட கார்டூன் வரைந்ததற்காக கடத்தப்பட்டார் என்பது நம்பக்கூடியதில்லையெனவும் லசந்த கொலையின் பின்னணியில் சரத் பொன்சேகாவே இருப்பதாக லசந்தவின் சகோதரர் தெரிவிப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.

எனினும் வெள்ளை வேன் கடத்தல்கள் கோத்தாவின் பணிப்பிலேயே இடம்பெற்றதாக மேர்வின் சில்வா தெரிவிக்கிறார்.

இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என கருதப்படும் கோத்தபாயவை பிரதம அதிதியாகக் கொண்டு பேருவளையில் எதிர்வரும் ஞாயிறு விசேட இப்தார் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment