சட்ட - ஒழுங்கு அமைச்சு ஏன் கிடைக்கவில்லை: பொன்சேக விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Friday, 4 May 2018

சட்ட - ஒழுங்கு அமைச்சு ஏன் கிடைக்கவில்லை: பொன்சேக விளக்கம்!


புதிய அமைச்சரவையில் சட்ட - ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அவருக்கு வனஜீவராசிகள் அமைச்சுப் பொறுப்பே வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான காரணத்தை விளக்கியுள்ளார் சரத் பொன்சேகா.தனக்கு வெளிநாடுகள் செல்வதற்கான விசா பெறுவதில் உள்ள சிக்கல் ஒரு புறமும், தான் இராணுவத் தளபதியாக இருந்ததனால் பொலிஸ் துறை பற்றித் தெரியாது என நினைத்துக் கொண்ட ஒரு சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரினது அழுத்தங்களினாலும் தமக்கு அவ்வமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மஹிந்த ராஜபக்ச கடும்பத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தவறி வருகின்றமைக்கு மைத்ரிபால சிறிசேனவே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment