சிரியா: ஈரானிய நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்! - sonakar.com

Post Top Ad

Thursday, 10 May 2018

சிரியா: ஈரானிய நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!


சிரிய அதிபர் அசாதுக்கு ஆதரவாக ஈரானிய படைகள் குவிக்கப்படுவது தொடர்பில் எதிர்ப்பைக் காட்டி வரும் இஸ்ரேல், சிரியாவில் உள்ள ஈரானிய இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.பல்வேறு நிலைகள் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள அதேவேளை ஈரான் இதுவரை இது குறித்து பதிலளிக்கவில்லை.

கோலன் மேட்டில் நிலை கொண்டுள்ள தமது துருப்பினரை நோக்கி ஈரானிய இராணுவ தளங்களிலிருந்து ரொக்கட் தாக்குதல் நடாத்தப்பட்டதாகக் கூறி இஸ்ரேல் இவ்வாறு  தாக்குதல் நடாத்தியுள்ளமையும் ஈரானைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்டுள்ள இஸ்ரேல் அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை பின் வாங்கச் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment