கல்முனை: மத்ரஸா மாணவர்களுக்கிடையிலான கிராஅத் - அதான் போட்டி - sonakar.com

Post Top Ad

Tuesday 29 May 2018

கல்முனை: மத்ரஸா மாணவர்களுக்கிடையிலான கிராஅத் - அதான் போட்டி


கல்முனைப் பிரதேச குர்ஆன் மத்ரஸா மாணவர்களிடையே மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்தி அவர்களின் ஆளுமையை விருத்தி செய்யும் நோக்குடன்  கல்முனை மிஸ்பாகுல் ஹுதா அமைப்பினரினால் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட கிராத் மற்றும் அதான் கூறும் போட்டி கடந்த சனி(25) மற்றும் ஞாயிற்றுக்கிழமை(27) கல்முனை மஸ்ஜிதுர் றஹ்மான் பள்ளிவாசலில் நடைபெற்றது.

இப்போட்டி நிகழ்ச்சிகளில் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 13 குர்ஆன் மத்ரஸாக்களிலிருந்து ஏறக்குறைய 50 மாணவ, மாணவிகள் பங்குகொண்டனர். இப்போட்டிகளில் திறமைகாட்டி தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களுக்கான இறுதி போட்டி எதிர்வரும் ஜுன் மாதம் 1ஆம் திகதி நடைபெறவுள்ளது.


இறுதிப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொள்ளும் போட்டியாளர்களுக்கு சன்மானங்களும், சான்றிதழல்களும் வழங்கப்படவுள்ளதோடு, இப்போட்டி நிகழ்ச்சிகளில் பங்குகொண்ட அத்தனை போட்டியாளர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக மிஸ்பாகுல் ஹுதா அமைப்பினர்; தெரிவித்தனர்.

இப்போட்டி நிகழ்ச்சிகளை மௌலவி ஆசிக் ஒழுங்கமைத்து நெறிப்படுத்தி நடாத்தியதுடன் அனுபவிக்க மௌலவிமார் இப்போட்டிகளுக்கு நடுவர்களாக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

-எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment