கல்வி அமைச்சர் திருகோணமலை விஜயம் - sonakar.com

Post Top Ad

Saturday, 19 May 2018

கல்வி அமைச்சர் திருகோணமலை விஜயம்


திருகோணமலைக்கு நேற்று(18) விஜயம் செய்த கல்வி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான  அகியவிராஜ் காரியவசம், திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் ஆசிரியர் விடுததியின் மூன்றுமாடி கட்டிட தொகுதி, வாணி வித்தியாலயத்தின் இரண்டுமாடி கட்டிடம், நாலந்தா மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வு கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.


பின்னர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் அழைப்பின் பேரில் கிண்ணியா மத்திய கல்லூரிக்கு குறுகிய விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு நிர்மாணிக்கப்பட்டுவரும் விளையாட்டரங்கு, விசேட தேவையுடையவர்களுக்கான கட்டிடம் ஆகியவற்றின் நிர்மாணப்பணிகளையும் பார்வையிட்டார்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

-ஹஸ்பர் ஏ ஹலீம்

No comments:

Post a Comment