ஜித்தாவில் அவசரமாகத் தரையிறங்கிய சவுதியா விமானம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 22 May 2018

ஜித்தாவில் அவசரமாகத் தரையிறங்கிய சவுதியா விமானம்!


மதீனாவிலிருந்து டாக்கா நோக்கிப் புறப்பட்ட சவுதி எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் நேற்றிரவு அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.


தரையிறக்க தொழிநுட்பத்தில் ஏற்பட்டிருந்த கோளாறு கண்டறியப்பட்டதையடுத்து ஜித்தாவுக்கு திசை திருப்பப்பட்ட விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

எயார்பஸ் 330 ரக விமானம் பாரிய தொழிநுட்ப பிரச்சினையை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை நேற்றிரவு 10 மணியளவில் பல மணி நேரம் வானில் வட்டமிட்ட நிலையில் பின் ஜித்தாவில் தரையிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment