நிட்டம்புவ: துப்பாக்கிச் சூட்டில் 53 வயது பெண் மரணம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 24 May 2018

நிட்டம்புவ: துப்பாக்கிச் சூட்டில் 53 வயது பெண் மரணம்!


நிட்டம்புவ, ஹக்வதுன்ன பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் 53 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது புதல்வர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் - மகன் மீது வேறு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தின் பின்னணி குறித்து பொலிசார் ஆராய்கின்ற அதேவேளை காயப்பட்டவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment