ஞானசார 'குற்றவாளி' : தீர்ப்பு ஜுன் 14ம் திகதி! - sonakar.com

Post Top Ad

Thursday, 24 May 2018

ஞானசார 'குற்றவாளி' : தீர்ப்பு ஜுன் 14ம் திகதி!


பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை மிரட்டிய வழக்கில் ஞானசார குற்றவாளியெனக் கண்டுள்ள நீதிமன்றம், எதிர்வரும் ஜுன் 14ம் திகதி தீர்ப்பளிக்கவுள்ளது.மஹரகம நீதிமன்றுக்குள் அடாவடியாக நுழைந்த ஞானசார அங்கு எகனலிகொடவின் மனைவியைத் தூற்றியதோடு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் இடையூறு விளைவித்திருந்தார்.

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் கைதாகியிருந்த ஞானசார பின்னர் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும் வழக்கு விசாரணை தொடர்ந்திருந்தது. ஜுன் 14 தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை அரசுடன் ஞானசார நல்லுறவைப் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment