தேசியப் பட்டியல் 'டிலானின்' பேச்சுக்கு மரியாதையில்லை: சந்திரிக்கா - sonakar.com

Post Top Ad

Sunday, 22 April 2018

தேசியப் பட்டியல் 'டிலானின்' பேச்சுக்கு மரியாதையில்லை: சந்திரிக்கா


தேர்தலில் நின்று வெல்ல முடியாமல் பல தடவைகள் தேசியப் பட்டியல் மூலமே நியமனம் பெற்று வரும் டிலான் பெரேரா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு செயலாளர்கள் பதவி விலக வேண்டும் என கோருவதை யாரும் கணக்கிலெடுக்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் சந்திரிக்கா.


குரூப் 16 உறுப்பினர்கள் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ள நிலையில் வெளியேறு முன் இறுதியாக சு.க மத்திய குழு கூட்டத்தைக் கூட்டுவதற்கு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இதன் மூலம் துமிந்த மற்றும் மஹிந்த அமரவீரவை பதவி நீக்க திடம் பூண்டுள்ள குரூப் 16 அதுவரை மஹிந்த அணியோடு இணைந்து கொள்வதையும் தாமதப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment