மே தின சர்ச்சை; வஜிர அபேவர்தன விளக்கம் - sonakar.com

Post Top Ad

Monday, 30 April 2018

மே தின சர்ச்சை; வஜிர அபேவர்தன விளக்கம்


இவ்வருடம் மே தின நிகழ்வுகள் 7ம் திகதிக்குத் தள்ளி வைக்கப்பட்டிருப்பது தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள அமைச்சர் வஜிர அபேவர்தன, அரசு தானாக நினைத்து அவ்வாறு செய்யவில்லையென தெரிவித்துள்ளார்.


வெசக் போயா அனுஷ்டானங்களுக்கு இடையூறில்லாத வகையில் பௌத்த துறவிகளின் வேண்டுதலுக்கமையவே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் இது அரசியல் தேவைக்கான செயற்பாடு இல்லையெனவும் அமைச்சர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

சந்திரனை அடிப்படையாக வைத்து கண்காணிக்கப்படும் போயா தினமாதலால் இதில் அரசுக்கு எவ்வித அரசியல் நோக்கமுமில்லையென அவர் மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment