முஸ்லிம்களுக்கு எதிராக 'தேசிய போராட்டம்'; ஞானசார எச்சரிக்கை! - sonakar.com

Post Top Ad

Monday, 30 April 2018

முஸ்லிம்களுக்கு எதிராக 'தேசிய போராட்டம்'; ஞானசார எச்சரிக்கை!


தேசிய சட்டங்களுக்கு முரணான வகையிலேயே இலங்கை முஸ்லிம் சமூகம் நடந்து கொள்வதாக தெரிவிக்கிறார் பொது பல சேனா பயங்கரவாதி ஞானசார.முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாகக் கூறி நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் என வும், அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகத்தினை மூடும் அபாயாக்கள் அணிவதை முற்றாக தடை செய்வதற்கான  சட்டத்தினை கொண்டுவர வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி சர்ச்சை தொடர்பிலேயே இவ்வாறு அறிக்கை மூலம் தெரிவித்துள்ள ஞானசார, முஸ்லிம்கள் இவ்வாறு சட்டத்தை மதிக்காத நிலையைத் தொடர்ந்தால் நாட்டு மக்கள் இதற்கு எதிராக ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஞானசாரவின் இந்து சம்மேளனமே அன்றைய தினம் திருகோணமலையில் ஆர்ப்பாட்டத்தை நடாத்தியதாக அவ்வமைப்பின் தலைவர் அருண் காந்த் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment