மைத்ரிக்கும் ரணில் மீது நம்பிக்கையில்லை: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Saturday, 31 March 2018

மைத்ரிக்கும் ரணில் மீது நம்பிக்கையில்லை: மஹிந்த


மத்திய வங்கியையும் இளைஞர் சேவைகள் கவுன்சிலையும் ரணில் விக்கிரமசிங்கவின் பொறுப்பிலிருந்து விடுவித்ததன் மூலம் தனக்கும் ரணில் மீது நம்பிக்கையில்லையென்பதை மைத்ரி எடுத்துக் கூறியுள்ளதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஐக்கிய தேசியக் கட்சியினரும் ரணிலுக்கு எதிராக வாக்களிப்பர் என தொடர்ந்தும் நம்பிக்கை வெளியிட்டு வரும் மஹிந்த, தனது அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்தியாளர்கள் கையொப்பமிடவில்லையெனவும் தெரிவிக்கிறார்.எனினும், நம்பிக்கையில்லா பிரேரணை முறியடிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment