பாகிஸ்தான் திரும்பிய மலாலா! - sonakar.com

Post Top Ad

Saturday, 31 March 2018

பாகிஸ்தான் திரும்பிய மலாலா!


2012ம் ஆண்டு பெண்கள் கல்விக்காகக் குரல் கொடுத்ததன் பின்னணியில் பாகிஸ்தான், ஸ்வாத் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உலக அரங்கில் பிரபல்யம் பெற்ற நபராக மாறியுள்ள மலாலா யூசுப்சாய் தனது சொந்த  மண்ணுக்குத் திரும்பியுள்ளார்.

ஆறு வருடங்களுக்குப் பின் அங்கு திரும்பிய மலாலா துப்பாக்கிச் சூடு நடந்த இடத்துக்குச் செல்வாரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லையெனினும் தாய் மண்ணுக்குத் திரும்பியதில் தாம் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக மலாலா தெரிவிக்கிறார்.20 வயதாகியுள்ள மலாலா, நோபல் பரிசு உட்பட சர்வதேச அரங்கில் பல்வேறு அங்கீகாரங்களைப் பெற்றுள்ள அதேவேளை, மேற்குலகம் மலாலாவை வைத்து நாடகமாடுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment