BMW விவகாரம்: ஓட்டிச் சென்றவர் 'உறவுக்காரர்' தான்: கபீர் ஹாஷிம் - sonakar.com

Post Top Ad

Monday 19 March 2018

BMW விவகாரம்: ஓட்டிச் சென்றவர் 'உறவுக்காரர்' தான்: கபீர் ஹாஷிம்




இரு வாகனங்களில் மோதிவிட்டு கைவிடப்பட்டு சென்ற பி.எம்.டபிள்யு சொகுசு வாகனத்தின் உரிமையாளர் தொடர்பில் முன் வைக்கப்பட்டு வரும் சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் குறித்த நபர் தனது உறவுக்காரர் தான் என தெளிவு படுத்தியுள்ளார் அமைச்சர் கபீர் ஹாஷிம்.

சம்பவ தினம் காலையில் இரவு கேளிக்கை விடுதியொன்றிலிருந்து புறப்பட்ட கார் விபத்துக்குள்ளான நிலையில் கைவிடப்பட்டு செல்லப்பட்டிருந்தது. அமைச்சரின் ஒருவரின் உறவுக்காரர் என தகவல் வெளியாகியிருந்த நிலையில் அது ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேன பயணித்த கார் எனவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்பட்டு வந்தது.


இந்நிலையில் குறித்த நபர் தனது உறவுக்காரர் எனவும் ஆனாலும் எந்த வகையிலும் தனது அரசியலுக்கும் அவருக்கும் தொடர்பில்லையெனவும் கபீர் ஹாஷிம் திட்டவட்டமாக மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment