ரிதிதென்ன-ஜெயந்தியாய பிரதேசங்களை இணைக்கும் வகையில் புதிய பாலம் - sonakar.com

Post Top Ad

Saturday, 17 March 2018

ரிதிதென்ன-ஜெயந்தியாய பிரதேசங்களை இணைக்கும் வகையில் புதிய பாலம்யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான ஜெயந்தியாய மற்றும் ரிதிதென்ன ஆகிய பிரதேசங்களை இணைக்கும் வகையில் 80 மில்லியன் ரூபாய் செலவில் புதிய பாலம் அமைக்கும் வேலைத்திட்டம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

கோறலைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் இவ்விரு கிராமங்களும் அமைந்துள்ள பகுதியில் கடந்த காலங்களில் அதிகமான வீதி விபத்துக்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் விபத்துக்களை தடுக்கும் வகையிலும், இரு கிராமங்களுக்கிடையிலான உறவினை வலுப்படுத்தும் வகையிலும் பாலமொன்றினை அமைக்குமாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கமைய மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் சுமார் 80 மில்லியன் ரூபாய் நிதி இத்திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், “ரிதிதென்ன மற்றும் ஜெயந்தியாய பிரதேசங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்படும் இந்த பாலத்தின் நிர்மாணப் பணிகள் 4 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும். இதன் மூலம் இவ்விரு கிராமங்களுக்கும் இடையிலான உறவுப் பாலம் மேலும் வலுப்பெரும். எமது கோரிக்கை ஏற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அதேவேளை, இவ்விரு பிரதேசங்களிலும் உள்ள வீதிகள் புனரமைக்கும் பணிகள் எனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் செய்யப்படவுள்ளது” என்றார். 

-R.Hassan

No comments:

Post a Comment