ஜெனிவா செல்கிறார் திலக் மாரப்பன - sonakar.com

Post Top Ad

Saturday, 17 March 2018

ஜெனிவா செல்கிறார் திலக் மாரப்பனஐக்கிய நாடுகள் சபையின் 37வது மனித உரிமைகள் பேரவை மாநாடு ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில் திங்களன்று இலங்கை தொடர்பான விவகாரங்களும் உள்ளடக்கப்படவுள்ளது.

இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன திங்கள் (19) அமர்வில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் சமூகம் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை எதிர்வரும் திங்கள் புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் சமூகமும் அங்கு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தவுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு எதிரான கடுமையான முடிவுகள் எதுவும் எடுக்கப்படப் போவதில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment