கந்தளாய்: முஸ்லிம் நபரின் வாகனத்துக்கு தீ வைப்பு! - sonakar.com

Post Top Ad

Thursday, 15 March 2018

கந்தளாய்: முஸ்லிம் நபரின் வாகனத்துக்கு தீ வைப்பு!கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலாம் கொலனிப் பகுதியில் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று இன்று(15) நள்ளிரவில் இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்ட வாகனம் சிலாபத்தை சேர்ந்த மொஹமட் சாஹிர் முஹம்மட் றம்சான் என்பவருக்கு சொந்தமான வாகனமென்றும் தெரியவருகிறது. 


வியாபாரம் நிமித்தம் கந்தளாய் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்ற நிலையில் நள்ளிரவில் கேட்ட அசாதாரண சத்தத்தையடுத்தே தாம் விழித்துக் கொண்டதாகவும் வெளியில் பார்த்த போது வாகனம் தீப்பற்றியெரிவதைக் கண்டதாகவும் தீயை அணைக்க முயற்சி செய்த அதேவேளை பொலிசுக்குத் தகவல் கொடுத்ததாகவும் உரிமையாளர் தெரிவிக்கிறார்.

கந்தளாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

-ஹஸ்பர் ஏ ஹலீம்

No comments:

Post a Comment