உறுதிமொழியையடுத்து பேஸ்புக் தடை நீக்கம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 15 March 2018

உறுதிமொழியையடுத்து பேஸ்புக் தடை நீக்கம்!


இனவாதத்தைப் பரப்புவதற்கு பேஸ்புக்கில் இடமளிக்கப்படாது என வழங்கப்பட்டுள்ள உறுதி மொழியையடுத்து பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கண்டி வன்முறைகளை உடனடியாகக் கட்டுப்படுத்தத் தவறியிருந்த இலங்கை அரசு, கடந்த 7ம் திகதி சமூகவலைத்தள பாவனைக்கு  தடை விதித்திருந்தது.


இந்நிலையில் தற்போது வட்ஸ்அப், வைபர் மற்றும் பேஸ்புக் பாவனை வழமைக்குத் திரும்பியுள்ள அதேவேளை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கும் உறுதிமொழியையடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment