ஐ.நா உதவிப் பொதுச்செயலாளருடன் அரசியல்வாதிகள் சந்திப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 11 March 2018

ஐ.நா உதவிப் பொதுச்செயலாளருடன் அரசியல்வாதிகள் சந்திப்பு!



இலங்கை வந்திருக்கும் ஐ.நா உதவிப் பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனை இன்று காலை முஸ்லிம் அரசியல்வாதிகளும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இதன் போது, இலங்கை முஸ்லிம்கள் மீது காலத்துக்கு காலம் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் அட்டூழியங்களுக்கும், அட்டகாசங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு சர்வதேசம் பாரிய அழுத்தங்களை வழங்க வேண்டுமென வேண்டிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இனவாத அச்சம் இன்னும் ஓயாத நிலையில், ஆங்காங்கு தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment