தென்னக்கும்பற - மெனிக்ஹின்ன பகுதிகளில் பதற்றம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 March 2018

தென்னக்கும்பற - மெனிக்ஹின்ன பகுதிகளில் பதற்றம்!


அவசர கால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் தற்சமயம் தென்னக்கும்பற மற்றும் மெனிக்ஹின்ன பகுதிகளில் பதற்ற நிலை நிலவுவதாக பிரதேச முக்கியஸ்தர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

பல குழுக்களாக பிரிந்து இனவாதிகள் சிறு கிராமங்களுக்குள் நுழைய முயல்கின்ற அதேவேளை விசேட அதிரடிப்படையினர் முஸ்லிம் இளைஞர்களை சில இடங்களில் தாக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.


பாதுகாப்பு படையினரின் உதவியோடே பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றமையும் தற்காப்பில் ஈடுபட்ட முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரசியல்வாதிகள் தமது மட்டத்தில் முயற்சியெடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment