சட்டத்திற்கு சவால் விடுக்கும் சண்டியர்கள் - sonakar.com

Post Top Ad

Thursday, 1 March 2018

சட்டத்திற்கு சவால் விடுக்கும் சண்டியர்கள்இலங்கையில் இனங்களுக்களுக்கிடையே ஐக்கியத்தை வளர்ப்பதற்கும், சமூக ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும், சகவாழ்வை நிலைபெறச் செய்வதற்கும் அமைச்சும், அதற்கான செயலகமும் ஏற்படுத்தப்பட்டு  செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இனவாதம் என்ற நஞ்சுச் புகையினால் இச்செயற்பாடுகள் வீரியம் பெற முடியாமல் முடமாக்கப்படுவதை அவானிக்க முடிகிறது. 


இனவாதத்தின் அரங்கேற்றங்கள் நிறைவடையவில்லை. தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்னர் முஸ்லிம்களை நோக்கிப் பாய்ந்த  பௌத்த சிங்கள பேரினவாதம் சுதந்திரத்தின் பின்னர் தமிழர்களையும் பதம்பார்த்தது. தமிழ் மக்கள் மீது பாய்ந்த இனவாதம் கொண்டிருந்த இலக்கிற்கும் முஸ்லிம்கள் மீது நெருக்கடிகளையும், வெறித்தனமாக தாக்குதல்களையும் மேற்கொண்டு அடைந்து கொண்ட இலக்குகளுக்;குமிடையே வேறுபாடு காணப்படுகிறது.

பேரினவாதம் இந்நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்களை அடக்கி ஆள முனைந்ததன் விளைவுகள்தான் 30 வருட கொடூர யுத்தத்திற்கு வழிவகுத்தது. அதன் வடுக்களிலிருந்து இன்னும் இந்நாடு மீள முடியாதுள்ளது. அரசாங்கத்தை சர்வதேசத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய அரசியல் சூழந்நிலைக்கும்;, நெருக்கடிக்கும்; தள்ளியிருக்கும் பேரினவாதம் காலத்திற்குக் காலம் இலங்கை வாழ் முஸலிம்கள் மீது முன்னெடுக்கின்ற தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள்;; விலைகொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதனால், உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பொருளாதாரம் முடக்கப்பட்டிருக்கிறது. கல்வி, கலாசாரம், மத விடயங்கள் மீது பேரழுத்தங்கள் புரியப்பட்டிருக்கின்றன.  போலிக்காரணங்களை உருவாக்கி அல்லது அவற்றை அடிப்படையாகக் கொண்டு திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லிம்கள் இவ்வாறு இனவாதத் தீயிக்கு பலியாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். சட்டவாக்கமும், நீதித்துறையும் இந்நாட்டில் நடைமுறையிலிருக்கின்றபோதிலும், கட்டவிழ்த்து விடப்படுகின்ற இனவாத செயற்பாடுகளுக்கெதிராக சட்டமும் நீதித்துறையும் அவற்றின் கடமைகளை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறதா என்ற சந்தேகத்தத்தையும் தோற்றவித்திருக்கிறது.

திசை மாறிய இனவாதம் 

ஏனெனில், 1915ல் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கம்பளைக் கலவரம் முதல்; 2018 பெப்ரவரி 27ஆம் திகதி  அம்பாறையில் முஸ்லிம்கள் மீது அரங்கேற்றப்பட்ட இனவாதத் தாக்குதல் சம்பவங்கள் வரை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இனவாதக் கொடூரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டநடவடிக்கைகள்  முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தவில்லை என்பதனாலேயே இச்சந்தேகம் எழுவதாகச்; சுட்டிக்காட்டப்படுகிறது.ஓர் இனம் மற்றைய இனத்தை விட மேலானது என்ற உள்ளார்ந்த நம்பிக்கைதான் இனவாதம். ஓர் இனம்;  தொடர்பான தப்பவிப்பிராயம், அவ்வினத்திற்கெதிரான வன்முறை, அடக்குமுறை, மேலாதிக்கம் போன்றவற்றை இனவாதம் கொண்டிருக்கிறது.   இனமேலாண்மை நம்பிக்கையின் அடிப்படையில் எதிர்மறை மனப்பாங்குகளோடு ஏனைய இனங்களை வெறுத்து, வெறுப்படையச் செய்து அடக்கி, ஒடுக்கி ஆள முனைகின்றனவர்கள்தான்; இனவாதிகளாகக் கருதப்படுகின்றார்கள்.

இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற ஒவ்வொரு இனவாத செயற்பாடுகளும் நன்கு திட்டமிடப்பட்;டே மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின் பின்னணியில் வௌ;வேறு சக்திகள் செயற்பட்டாலும், அதில் முக்கிய வகிபாகம் வகிப்பது அரசியலாகும். ஏனெனில், இலங்கை வரலாற்றில் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவராமாக 1915ல் இடம்பெற்ற சிங்கள முஸ்லிம் கலவரம் கருதப்படுகிறது.இக்கலவரத்தினால் முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பான வர்த்தக நிலையங்கள் அழித்தொழிக்கப்பட்டு சொத்தழிவுகள் ஏற்படுத்தப்பட்டதோடு பள்ளிவாசல்களும், வீடுகளும் அழிக்கப்பட்டன.  

ஏறக்குறைய பத்து தசாப்தங்கள் கடந்தும் முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சி மீதான காழ்ப்புணர்ச்சி பேரினவாதிகளின் பரம்பரையலகுகளினூடாகக் கடத்தப்பட்டு வருவதன் எதிரொலியாகவே 2001ல் மாவனல்லையில் மேற்கொண்ட இனவாதத் தாக்குதல் சம்வங்களையும,; 2014 ஜுன் மாதத்தில் அளுத்தமையில் புரிந்த கோர வன்முறைகளையும், 2017 நவம்பர் 18ல் கிந்தோட்டையில் ஆடிய இனவெறியாட்டத்தையும் நோக்க வேண்டியுள்ளது.  வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் செறிந்தும், சிதரியும் வாழும் முஸ்லிம்களை காலத்திற்குக்காலம் காவுகொண்டு வந்த பௌத்த பேரினவாதத் தீயானது கடந்த செவ்வாய்க்கிழமை கிழக்கின் அம்பாறையில் வாழும் முஸ்லிம்களின் பொருளாதாராத்தையும், மத அடையாளத்தையும் அடியோடு அழிப்பதற்கு  விசித்திரமான காரணத்தை ஏற்படுத்தி தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறது. இதன் மூலம் இனவாதம் தென்னிலங்கையிலிருந்து கிழக்கிற்கு திசைமாறியிருக்கிறது.

வடக்கு, கிழக்கிற்கு வெளியே முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு இனவாதச் செயற்பாடுகளும் தனிநபர் மற்றும் குழுக்களுக்கிடையே ஏற்படுகின்ற சம்பவங்களாக இருந்து அவை இனரீதியாக நோக்கப்பட்டு வன்முறைகளாக்கப்பட்டிருக்கின்றன. கம்பளை, கண்டி, மாவனல்லை, அளுத்தமை, கிந்தோட்டை என இலங்கையின் வௌ;வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட இனவாத அழிப்பு நடவடிக்கைகள் இவற்றிற்கு உதாரணங்களாகும். 

இனவாதத்தின் புதிய கண்டு பிடிப்பு

ஆனால,; கடந்த 27ஆம் திகதி அம்பாறையிலுள்ள முஸ்லிம்களின் சொத்துக்களையும், மத அடையாளத்தையும் அழித்தொழிபதற்கு மொழியப்பட்ட காரணம்தான் மிகவும் விசித்திரமானது. வைத்திய நிபுணர்களினால் கூட நிரூபிக்க முடியாத ஒரு காரணத்தைக் கூறி கலவரமாக்கியிருக்கிறது பேரினவாதம். அதுதான், அம்பாறையில் மிக நீண்டகாலமாக இயங்கி முஸ்லிம் நபருக்குச் சொந்தமான ஹோட்டலில் கருத்தடை மாத்திரையை உணவுப்பொருட்களுடன் கலந்து விற்பனை செய்வதான  குற்றச்சாட்டாகும். 

முன்கூட்டியே திட்டமிட்ட இனவெறியாட்டத்திற்கு முன்வைக்கப்பட்ட போலியான இக்குற்றச்சாட்டு எந்தளவு பலவீனமானது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதைத் தெரிந்து கொண்டால்தான் இனவாதத்தின் முகத்திரையைத் தோலுரிக்க முடியும். இலங்கையில் கருத்தடை முறைகள் பல காணப்படுவதாக வைத்தியர்கள் கூறுகின்றனர். பொதுவாக ஐந்து முறைகள் காணப்படுவதாகவும் அதில் 4 முறைகள் பெண்களுக்கு உரியதென்றும் ஐந்தாவது முறையில் சத்திரசிகிச்கை முறையொன்றுள்ளது அது பெண்களுக்கும், ஆண்களுக்கும் நிரந்தர கருத்தடை செய்வதற்கான முறையாகப் பயன்படுத்தப்படுகிறது.

இக்கருத்தை முறைகளில்,; வாய் மூலம் உட்கொள்ளும் ஓசிபி எனப்படும் கருத்தடை மாத்திரை பாவிப்பதும் ஒரு முறையாகும். இந்த மாத்திரை ஒரு நாளைக்கு கருத்தடையை ஏற்படுத்தும் என்றும் அதற்கு மேல் ஏற்படுத்தாது என்றும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு, பொதுவாக மருந்துகள் 25 பாகை வெப்பநிலையில் வைத்துப் பாதுகாப்பட வேண்டும் என்றும் 30 முதல் 35 பாகையை விட வெப்பநிலையைத் தாண்டும்போது, மருந்துகள் செயல் இழக்க ஆரம்பிக்கும். அவ்வாறயின் 100 பாகைக்கும் அதிகமான வெப்பநிலையில் தாயரிக்கப்படும் கொத்து ரொட்டியில் பேரினவாதம் குற்றஞ்சாட்டியுள்ள இக்கருத்தடை மாத்;திரையின் சக்தித்தன்மைக்கு என்னவாகும் என்பதை ஒரு சாதாரண நபராலும் புரிந்து கொள்ள முடியும். 

இவ்விடயத்தின் அறியாமை ஒருபுறமிருக்க, தாய்மொழியில் பரீட்சையமுள்ள ஒருவரிடம்; ஒரே நேரத்தில் பலர் பல கேள்விளைக் தொடுக்கும் போது அந்நபரினால் விடையளிப்பதே சிரமமாக இருக்கும் வேளை, சிங்கள மொழியில் பரீட்சையமில்லாத ஒருவரிடம் பலர் ஒரே நேரத்தில் கேள்வியைக் கேட்கும்போது அவரால் முறையாகவும் சரியாகவும் பதிலலிக்க முடியுமா என்பதை புரிந்துகொள்ள முடியும். இவ்வாறுதான் குறித்த ஹோட்டல் ஊழியரிடம் அப்பிரதேச பேரினவாத நபர்கள் கேட்ட கேள்விகளுக்கு குறித்த ஹோட்டல் ஊழியர் மொழி விளங்காது அச்சத்தோடு அளித்த பதிலை  ஒளிப்பதிவு செய்து  குறித்த ஹோட்டல் ஊழியர்  கொத்து ரொட்டிக்குள் கருத்தடை மாத்திரை கலந்துவிட்டதை ஒப்புக்கொண்டார் என்பதாக அக்காணொளி சமூகலைத்தளங்களில் வைரலாகப் பகிர்ந்து கொண்டுள்ளனர். 

இதேவேளை, 'கொத்து ரொட்டிக்குச் சேர்க்கப்படும் கறியை கொஞ்சம் கட்டித்தன்மையாக்குவதற்கு அதனுள் கோதுமை மாதான் சேர்க்கப்பட்;டே தவிர வேறு ஏதுவும் சேர்க்கப்படவில்லை' என அக்குறித்த ஊழியர் தெரிவித்ததாகவும் அறிய முடிகிறது. கோதுமை மாவை கருத்தடை மாத்திரை எனக் கண்டு பிடித்த இனவாதிகள் தங்களை மலடாக்குவதற்காக கருத்தடை மாத்திரைகளை உணவுப் பொருட்களுக்குள்  முஸ்லிம்கள் கலக்குகிறார்கள், எங்களது இன விருத்தியை அழிக்கிறார்கள் என்று பொய்யான பரப்புரையை மேற்கொண்டு, குறித்த ஹோட்டல் ஊழியருடன் வாக்குவாதப்பட்டதுடன்  குறித்த நேரத்துக்குள் நூற்றுக்கணக்கான இனவெறியர்களை ஒன்று சேர்த்து  இனவெறியாட்டை கடந்த 27ஆம் திகதி அம்பாறையில் அரங்கேற்றியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

சட்டம் ஒழுங்கிற்குச் சவால்

சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்ட இனவாதிகள், குறித்த நபரின் ஹோட்டலை மாத்திரமின்றி அக்ஹோட்டலிருந்து 500 மீற்றருக்கும் அப்பாலுள்ள பள்ளிவாசலைச் சேதப்படுத்தியும், சுவரை உடைத்தும்;, அங்குள்ளவர்களைத் தாக்கியும். வானங்களை உடைத்து தீயிட்டுக் கொழுத்தியும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளை தேடி அவற்றிற்குக்கு தீ மூட்டி எரித்துமுள்ளனர்.. சட்ட ஒழுங்கிற்கு சவால்விடுத்த இச்சம்பவங்களை சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய பொலிசார் உரிய நேரத்திற்குள் குறித்த இடத்திற்கு வந்து சட்டத்தை நிலைநாட்ட தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. எது எவ்வாறிருப்பினும் இச்சம்பவங்கள் நன்கு திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதைப் புலப்படுத்துகிறது.

ஒரு குறித்த நபர் தவறு செய்தால் அந்நபருக்கு எதிராக சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பதே மரபாகும். ஏனெனில் இது சட்டவாட்சியுள்ள நாடு. ஆனால், சட்டமும் நீதியும் விழித்திருக்க இனவாதிகள் சட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். ஆதலால், சட்டம் இந்தச் தாக்குதல் சம்பவத்தையும் எவ்வாறு கையாளப்போகிறது. ஏனெனில், சட்டமும் ஒழுங்கும் அமைச்சு நாட்டின் பிரதமரின் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களைப் போல் தாக்குதல் சம்பவங்களில்  ஈடுபட்டவர்களை சட்டம் கண்டுகொள்ளாதது போன்று இத்தாக்குதல் சம்பவங்களுடனும்  சம்பந்தப்பட்டவர்கள் கண்டுகொள்ளாமல் விடப்படுவார்களா அல்லது  முறையான தண்டனையை வழங்குவதற்கான சட்டம் அவர்கள் மீது  பிரயோகிகக்கப்படுமாக என்பதே முஸ்லிம்களினது எதிர்பார்பாகவுள்ளது.

சுதந்திரம் பெற்ற ஜனநாயகத் தேசமொன்றில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது அவசியம். எந்தவொரு நபரினாலோ அல்லது ஒரு குழுவினாலோ ஒரு தனி நபரது அல்லது ஓர் இனத்தினது உரிமைகள் பறிக்கப்படுகின்றபோது, அவ்வுரிமைகளுக்கு பங்கம் ஏற்படுகின்றபோது அல்லது ஒரு இனம் வேண்டுமென்றே திட்டமிட்ட தாக்குதல்களுக்கு உட்படுகின்றபோது, அத்தாக்குதல்களில் தொடர்புபட்ட குறிப்பிட்ட தனிநபருக்கெதிராக அல்லது அந்தக் குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டியது சட்ட ஆட்சி இடம்பெறும் ஜனநாயகத் தேசத்தினை 

ஆளும் ஆட்சியாளர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.

அவ்வாறு குற்றம் புரிவோர், குற்றம்; செயல் இடம்பெறுவதற்கு தூண்டுவோருக்கு எதிராகச் சட்டம் அதன் கடமையை சரியாக நிலைநிறுத்தும்போதுதான் அத்தேசத்தில் ஜனநாயகம் மலரும். மனித உரிமைகளை மதிக்கின்ற, ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கின்ற பல்லின சமூகம் வாழும் ஒரு சுதந்திரத் தேசத்தில் தனிநபரினால் அல்லது ஒரு குழுவினால் ஓர் இனம்  வஞ்சிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டியது அந்தத் தேசத்தின் அரசையே சாரும் என்பது ஜனநாயக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாகும். இலங்கையும் பல்லின சமூகங்கள் வாழும் ஒரு சுதந்திரத் தேசமாகும். இத்தேசத்தில் வாழும் சகல இனங்களும் தங்களுக்கான சுதந்திரத்துடன் ஏனைய சமூகங்களின் சுதந்திரங்களை மீறாது தமக்குரிய உரிமைகளோடு வாழ்வதற்கு உரித்துடையவை.

ஓர் இனத்தினர் தம்மை எதுவாக அடையாளப்படுத்த விரும்புகிறார்களோ அதுவாக அவர்களை அங்கீகரிப்பதுதான் இனங்களின் தனித்துவத்தை, அம்மக்களின் அபிலாசைகளை மதிப்பவர்களின் கடமையாகும். ஆனால,; கடும்போக்கு மதவாதிகள் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகங்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் தனித்துவ உணவு, தனித்துவ ஆடை எனப் பல தனித்துவ அடையாளங்களை சிதைப்பதை இலக்காகக்கொண்டு கடந்த ஆட்சிக் காலத்தில் செயற்பட்டிருக்கிறார்கள்ள். அதன் விளைவுகளையும் அவர்களும் அவர்களுக்கு பக்கபலமாக இருந்தவர்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

கடந்த ஆட்சியில் முஸ்லிம்கள் எவ்வாறான தாக்குதல்களுக்கு இலக்கானார்களோ அதில் எவ்வித மாற்றமுமின்றி இந்நல்லாட்சியிலும் தாக்குதல்களுக்கு உள்ளாகியிக்கொண்டிருக்கிறார்கள என்பதை அம்பாறை தாக்குதல் சம்பவங்களும் நன்றாகப் புலப்படுத்தியிருப்பதையே அவதானிக்க முடிகிறது. ;குற்றம் விளைவித்தால்  அந்தக் குற்றத்திற்கு தண்டனை வழங்க இந்நாட்டில் சட்டம் இருக்கிறது. ஏனெனில,; சட்டத்தின்முன் எல்லோரும் சமமானவர்கள். ஆனால் குற்றம்; செய்தார்கள், குற்றம் செய்யத் தூண்டினார்கள் என்று நீதியையும் நியாத்தையும் சட்டவரம்புகளையும் மதிக்கின்றவர்களால் சுட்டிக்காட்டப்படுபவர்கள் சட்டத்தினால் இதுவரை முறையாக தண்டிக்கப்பட்டுள்ளர்களா? என்பது கேள்விக்குற்படுத்தப்பட வேண்டியதாகும்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தி, குற்றமிழைத்தவர்களை அல்லது குற்றம் புரியத் தூண்டியவர்களை கைது செய்து தண்டனை வழங்க, சட்டத்தை நிறைவேற்றுக்கின்ற மன்றங்கள் இருந்தும் கூட, குற்றமிழைத்தவர்கள் சுதந்தரிமாக உலாவுவதாகக் கூறப்படுவதானது மனித உரிமைகளையும் சட்டத்தையும் மதிக்கின்றவர்களின் உள்ளங்களில் வேதனையை உருவாக்கியுள்ளது. இந்த வேதனைக்கு மத்தியில்தான் இரவில் குற்றமிழைத்தவர்கள் சுதந்திரமாக தாங்கள் செய்தது குற்றமில்லை என்பதைப் போல் அம்பாறையில் 27ஆம் திகதி காலையில் நடந்துகொண்டதை காணொலிகளினூடாகக் காணக்கிடைத்தது. உரிய இடத்திற்குச் சென்ற பிரதி அமைச்சர் ஹரிசை பேசவிடாமல் தடுத்தும் முஸ்லிம்களை வேண்டத்தகாத வார்த்தைகளால் தூஷித்ததன் மூலம் அவர்கள் மத்தியிலிருந்த இனவாதத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியதை அக்காணொளி பறைசாட்டியிருக்கிறது.

அம்பாறையில் பரம்பரைபரம்பரையாக ; சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கும் சூழலில் அவர்களது ஒற்றுமைய கேள்விக்குறியாக்கும் வகையில் இனவாதச் சண்டியர்கள் செயற்பட்டது மாத்திரமின்றி சட்டத்திற்கும் சவால்விடுத்திருக்கிறார்கள். அம்பாறை மாவட்டத்தில் சனத்தொகை ரீதியாகவும், பொருளாதாரத்திலும் கல்வியிலும் முன்னேறியுள்ள முஸ்லிம்களுக்கு முன் எச்சரிக்கையாகவும், அம்பாறை நகரில் முஸ்லிம்களின் இருப்பையும், வர்த்தக நடவடிக்கைகளையும் கேள்விக்குறியாக்குவதற்கும், மத அடையாளத்தை அழிப்பதற்குமான திட்டமிட்ட இச்செயற்பாட்டின் பின்னணி சக்தி தொடர்பில் கண்டுபிடித்து முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற அச்சத்தைப் போக்க சட்டம் அதன் கடமையைச் செய்ய வேண்டும் என்பது முஸ்லிம்களின் கோரிக்கையாகவுள்ளது.மாவனல்லை முதல் கிந்தோட்டை வரை பேரினவாதத்தினால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களினால் கோடிக்கணக்காள சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அவற்றில் சம்பந்தப்பட்டவர்களுக்கான சட்ட நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டனவான என்ற கேள்வி ஒருபுறமிருக்க அத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டயீடுகள் முறையாக வழங்கப்பட்டனவா என்பதும் கேள்விக்குறியான விடயமாகும். இந்நிலையில் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கும் நஷ்டயீடுகள் வழங்க வேண்டும் என முஸ்லிம் அரசியல் தரப்புக்கள் அரசாங்கத்தைக் கோரியுள்ளன.

இருந்தாலும், பேரினவாதம் அழிப்பதும் அதற்காக இழப்பீடு வழங்குவதும் அல்லது வழங்கக் கோருவதும் நமக்கான விடிவைத் தராது. ஒரு சம்பவம் இடம்பெற்றால் அதுதொடர்பில் மூன்று நாட்களுக்கு கண்டன அறிக்கைகளை விட்டு விட்டு அல்லது எதிர்ப்புப் பேரணிகளை நடாத்திவிட்டு ஓய்ந்து விடும் அல்லது மறந்து விடும் சமூக மற்றும் அரசியல் கலாசாரமே வரலாற்று நெடுங்கிலும் முஸ்லிம்கள் மத்தியில்; காணப்படுவதை அவதானிக்கலாம். இத்தாக்குதல் சம்பவத்தையும்; பழைய குருடி கதவைத் திறடி என்ற நிலைக்கு விட்டுச் செல்லாமல், இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் இருப்பு முதல் அத்தனை விடயங்களும் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் காத்திரமான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு; இராஜந்திர ரீதியாக முன்னெடுக்க வேண்டியது  முஸ்லிம் அரசியல் தலைமைகளினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும், சிவில் அமைப்புக்களினதும், புத்திஜீவிகளினதும் தார்மீகப் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

முஸ்லிம்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியிலில் இலங்கையின் பெயரும் சர்வNதுச மன்னிப்புச் சபையினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில,;   இந்நாட்டில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தவும், அதற்கான அத்தனை நடவடிக்கைகளையும், ஒழுங்கமைக்கப்பட்;ட வடிவில், அறிவூர்வமாகவும், தூரநோக்கு சிந்தனையுடனும் முன்னெடுக்கவும், தனித்துவமான ஒரு சமூகம் என்ற  ரீதியில்; கட்சி அரசியலுக்கும், கொள்கை,  கோப்பாடுகளுக்கும் அப்பால் அனைத்துத் தரப்பும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. சமகால சமூகத்தின் இருப்பும், ஜனநாயக உரிமைகளும் பாதுகாக்கப்படவில்லையானால் எதிர்கால சந்தியினரின்  வாழ்வுரிமை நிச்சம்  கேள்விக்குறியாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

-எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment