அனைத்து இடங்களிலும் ஜும்மா தொழுகை சுமுகம் - sonakar.com

Post Top Ad

Friday, 9 March 2018

அனைத்து இடங்களிலும் ஜும்மா தொழுகை சுமுகம்


வன்முறைக் காலத்தில் பாரிய அளவில் வதந்திகளும் அச்சமூட்டலும் இடம்பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் அனைத்து இடங்களிலும் ஜும்மா தொழுகை சுமுகமாக இடம்பெற்றுள்ளது.


திகன உட்பட சில இடங்களில் படையினர் ஜும்மா வேளையில் பிரசன்னமாகியிருந்த அதேவேளை ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிவாயல்கள் உள்ள இடங்களில் திட்டமிட்ட வகையில் ஜும்மா மற்றும் ளுஹர் தொழுகைகள் நேர இடைவெளியுடன் நிறைவேற்றப்பட்டிருந்தது.


இந்நிலையில், கொழும்பு, தர்கா நகர் உட்பட சில இடங்களில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment