மத்திய மாகாணத்தில் மீண்டும் இரவு நேர பதற்றம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 7 March 2018

மத்திய மாகாணத்தில் மீண்டும் இரவு நேர பதற்றம்


மத்திய மாகாணத்தின் பல முஸ்லிம் கிராமங்களில் மீண்டும் இரவு நேர பதற்றம் நிலவுகிறது. எனினும், தற்சமயம் கண்டியில் ஜனாதிபதியுடனான சந்திப்பையடுத்து முஸ்லிம் அமைச்சர்கள் அங்கு பிரசன்னமாகியிருக்கும் நிலையில் சில இடங்களில் பாதுகாப்பு படையினர் ஒத்துழைப்பு வழங்கி வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.


அக்குறணையில் காலை முதல் பதற்ற நிலை தொடர்ந்து வருகின்ற அதேவேளை அங்கு இன்று இரவு விஜயம் செய்த அமைச்சர்கள் ஹலீம் மற்றும் ரிசாத் பதியுதீன் இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கின்ற அதேவேளை அலவத்துகொட பகுதியிலிருந்து இரவு நேரத்தில் தாக்குதல் நடாத்தப்படக் கூடும் என்ற அச்சமும் நிலவுவதால் அதற்குரிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.


இதேவேளை நாவலபிட்டிய கசாவத்தை பகுதியில் ஏற்பட்ட பதற்றம் சற்று தணிந்திருப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment