சஞ்சலமின்றி பிறந்த நாள் கொண்டாடத் தயாராகும் ரணில்! - sonakar.com

Post Top Ad

Saturday, 24 March 2018

சஞ்சலமின்றி பிறந்த நாள் கொண்டாடத் தயாராகும் ரணில்!


அளுத்கமயை விட மோசமான முறையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இனவன்முறையை, சட்ட - ஒழுங்கு அமைச்சராக இருந்தும் கட்டுப்படுத்த முடியாது போன நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணையொன்றையும் எதிர்கொள்ளவுள்ள ரணில் விக்கிரமசிங்க நாளை பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்.

சேதவத்தை விகாரையில் பிரதான நிகழ்வு இடம்பெறவுள்ள அதேவேளை, மத வழிபாட்டுத் தளங்களில் ரணிலுக்காக விசேட பூஜை மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மஹிந்த அரசு மீது சுமத்தப்பட்ட கொள்ளை, இனச்சுத்திகரிப்பு குற்றங்களைத் தானும் சுமந்த நிலையில் ரணில் தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment