திகன உட்பட இரு இடங்களில் பள்ளிவாசல்கள் சேதம்! - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

திகன உட்பட இரு இடங்களில் பள்ளிவாசல்கள் சேதம்!நேற்றிரவு முதல் நிலவி வரும் வன்முறை சூழலின் பின்னணியில் திகன மற்றும் தெல்தெனியவில் பள்ளிவாசல்கள் சேதமுற்றிருப்பதுடன் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் பல தீக்கிரையாகியுள்ளன.

இன்றைய மரண ஊர்வலத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்களால் கணிசமான எண்ணிக்கையான வீடுகளுக்கு கல்வீச்சு இடம்பெற்றுள்ளதுடன் பல இடங்களில் வர்த்தக நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.திகன வரை மரண ஊர்வலம் செல்வதற்குத் தடையிருந்த போதிலும் ஏனைய பகுதிகளில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெற்றதுடன் பாதுகாப்பு படையினரின் பிரசன்னம் விளைவுகளை தடுக்கவல்லதாக இருக்கவில்லையென பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திகன உட்பட சூழவுள்ள பல முஸ்லிம் பகுதிகள் பாதிப்புக்கள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment